திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
X

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பொதுமக்களிடம் குறை கேட்டு மனுக்களை பெற்றார்.

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது.

திருச்சி மாநகரக்காவல் துறை சார்பில் இன்று பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி இன்று 6.3.2024 ஆம் தேதி திருச்சி மாநகரம் கே.கே. நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் இச் சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 263 மனுக்கள் பெறப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தீர்வு காண அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் முகாம் முதலமைச்சரின் தனிப்பிரிவு ,காவல்துறை தலைமை இயக்குனரிடம் நேரடியாகவும், தபால் ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 432 மனுக்கள் புறப்பட்டு 290 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு மீதமுள்ள 142 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் 112பழைய மனுக்களில் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரித்து உடனடியாக தீர்வு காணப்பட்டது திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் அளித்த 373 மனுக்களில் 129 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்படும். மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு முகாமில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள், தெற்கு மற்றும் வடக்கு காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story