திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நடத்திய சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நடத்திய சிறப்பு குறைதீர்ப்பு முகாம்
X
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தினார்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடத்தி உள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் முகாம்களை நடத்த உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவின் படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் முகாம்களை நடத்தி பொதுமக்களிடமிருந்து வருவாய்த்துறை, சமூக நலத்துறை, உள்ளாட்சி துறை மற்றும் அனைத்து துறைகளிலும் குறைகளை கேட்டு அறிந்து அதற்கான தீர்வினை வழங்கி வருகிறார்கள்.

அதே போல காவல்துறை அதிகாரிகளுடன் மக்களுடன் முதல்வர் முகாம்களை நடத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு காவல்துறை இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின் படி வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி திருச்சி மாநகரம் கே.கே. நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 21 மனுக்கள் புறப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தீர்வு காண அறிவுரை வழங்கப்பட்டது.மேலும் 12 பழைய மனுக்களை மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை அழைத்து விசாரித்து உடனடியாக தீர்வு காணப்பட்டது.

மேலும் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் முகாம், முதலமைச்சரின் தனிப்பிரிவு,காவல்துறை தலைமை இயக்குனர் நேரடியாகவும், தபால்,ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 37 மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம்ட அளித்த 269 மனுக்களில் 81 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் மாநகர துணை ஆணையர் மற்றும் சரக உதவி காவல் ஆணையர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!