திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நடத்திய சிறப்பு குறைதீர் முகாம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி நடத்திய சிறப்பு குறைதீர் முகாம்
X

சிறப்பு குறைதீர் முகாம் நடத்தினார் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி சிறப்பு குறைதீர் முகாமில் 18 மனுக்கள் வழங்கப்பட்டது.

திருச்சியில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் காமினி பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன்படி இன்று 27/3/2024-ம் தேதி திருச்சி மாநகரம் கேகே நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் காவல் ஆணையர் காமினி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் இச் சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 18 மனுக்கள் புறப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தீர்வு காண அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் முகாம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களடம் நேரடியாகவும் ,தபால் ஆன்லைன் மூலமாகவும், பொதுமக்கள் அளித்த 540 மனுக்கள் புறப்பட்டு 434 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு மீதம் உள்ள 16 மனுக்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களிடம் அளித்த 470 மனுக்களில் 200 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டும் மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது முகாமில் காவல் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் வடக்கு காவல் சரக உதவியாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.

தமிழக முதல்வர் உத்தரவின்படி திருச்சி மாநகர காவல் துறை சார்பில் புதன்கிழமை தோறும் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து