வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்- அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆய்வு

வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்- அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்  ஆய்வு
X

திருச்சியில் நடந்த வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு செய்தார்.

திருச்சியில் வாக்காளர் சிறப்பு முகாமை அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் ஆய்வு செய்தார்.

முன்னாள் அமைச்சரும், திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான வெல்லமண்டி என்.நடராஜன், திருச்சி மாநகர் மாவட்டத்தின் மலைக்கோட்டை பகுதியில் உள்ள வார்டுகளில் நடைபெற்ற வாக்கு சேர்க்கும் சிறப்பு முகாம்களில் நிர்வாகிகள் வாக்கு சேர்க்கும் பனியினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதே போல மாநகரில் நடைபெற்ற அனைத்து முகாம்களையும் நேற்றும், இன்றும் ஆய்வு செய்து நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன், மாநில பீடி மற்றும் தீப்பெட்டி பிரிவு செயலாளர் இ.சகாப்தீன், மாநகர் மாவட்ட ஐ.டி பிரிவு செயலாளர் தாயார் ஜிி.சீனிவாசன், மலைக்கோட்டை பகுதி செயலாளர் எம்.ஏ.அன்பழகன், பொன்.அகிலாண்டம், வி.ராமமூர்த்தி, எஸ்.ராஜ்மோகன், எஸ்.ராமசாமி, கதிர்வேல், ஜெயக்குமார், சிங்கமுத்து, ராமநாதன், ரஹமத்துல்லா, மலைக்கோட்டைப் பகுதி ஐ.டி. செயலாளர் கதிரவன், உறையூர் சுரேஷ், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story