/* */

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருச்சியில் போக்குவரத்து மாற்றம்

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருச்சி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருச்சியில் போக்குவரத்து மாற்றம்
X

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு விழா நாளை மறுநாள் 14.12.2021-ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. இதையொட்டி திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றது. 13.12.2021-ந்தேதி இரவு 8 மணி முதல் 14.12.2021-ந்தேதி இரவு 8 மணி வரை கரூரிலிருந்து வரும் கனரக வாகனங்கள் முசிறியில் இருந்து நெ .1 டோல்கேட் வழியாக தஞ்சாவூர் செல்ல வேண்டும். தஞ்சை, புதுக்கோட்டையிலிருந்து கரூர் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் சஞ்சீவி நகர் வழியாக நெ .1 டோல்கேட் முசிறி வழியாக கரூர் செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெரம்பலூர், கடலூர், துறையூர், அரியலூர் செல்லும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் அண்ணாசிலை ஓடத்துறை ஓயாமாரி ரோடு NH 45 நெ .1 டோல்கேட் வழியாக சென்று வர வேண்டும். கொண்டையம்பேட்டை, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில் செல்லும் நகர பேருந்துகள் தவிர மற்ற நகர பேருந்துகள் அண்ணாசிலை ஓடத்துறை – ஓயாமாரி ரோடு NH45 – கொண்டையம்பேட்டை – நெ .1 டோல்கேட் வழியாக செல்ல வேண்டும்.

சத்திரம் பேருந்து நிலையம் வரும் நகர பேருந்துகள் திருவானைக்காவல் – மாம்பழசாலை வழியாக செல்ல வேண்டும். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் நகர பேருந்துகள் அனைத்தும் மாம்பழசாலை -திருவானைக்காவல்– காந்திரோடு –ஜேஏசி கார்னர் வழியாக ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் சென்று பக்தர்களை இறக்கி விட்டு விட்டு அம்மா மண்டபம் ரோடு மாம்பழசாலை – காவேரி பாலம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும். வெளியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரும் பேருந்து மற்றும் வேன்கள் NH45 – CP 6 – கொள்ளிடகரை – பஞ்சகரையில் அமைந்துள்ள யாத்திரிநிவாஸ் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும். மற்றும் நெல்சன் ரோட்டில் அமைந்துள்ள சங்கர் தோப்பு (சிங்கபெருமாள் கோவில்) உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் வரும் பக்தர்கள் பஞ்சகரை வழியாக வரும் அனைத்து இருசக்கர வாகனங்களும் மேலூர் நெடுந்தெரு மந்தை, மேலவாசல் வழியாக தெப்பகுளம் சுற்றி வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . மேலும் திருவானைக்காவல், நெல்சன் ரோடு வழியாக ஸ்ரீமத் ஆண்டவன் கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்திற்கு செல்ல வேண்டும். பின்னர் மீண்டும் அதே வழியில் செல்ல வேண்டும். எனவே ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெறும் வைகுந்த ஏகாதசி (சொர்க்கவாசல் திறப்பு) விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்களது இருசக்கரவாகனங்கள், கார், வேன் மற்றும் பேருந்துகளை மேற்கண்ட இடங்களில் நிறுத்த வேண்டும் என காவல்துறை மூலம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Updated On: 12 Dec 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...