திருச்சியில் சமூக நல்லிணக்க முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் சமூக நல்லிணக்க முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
X

திருச்சியில் சமூக நல்லிணக்க முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசினார்.

திருச்சியில் சமூக நல்லிணக்க முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் இன்று தமிழ்நாடு சமூக நல்லிணக்க முன்னணி சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.சி. ராஜன் தலைமை தாங்கினார்.

சிறுபான்மையினருக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் அநீதிகளை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு , வழக்கறிஞர் மனோஜ் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!