திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை மாற்றக்கோரி சமூக நீதி பேரவை மனு

திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை மாற்றக்கோரி சமூக நீதி பேரவை மனு
X
திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி மனு கொடுக்க வந்த சமூக நீதி பேரவையினர்.
திருச்சி அருகே டாஸ்மாக் மதுபான கடையை மாற்றக்கோரி சமூக நீதி பேரவை சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது சமூக நீதி பேரவை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் வந்து கொடுக்கப்பட்ட மனுவில்

ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் வடக்கு அரியாவூர் ஊராட்சி அல் அமீன்நகர்,குலாம் அலிகான் நகர் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.இந்த குடியிருப்புகள் சோமரசம் பேட்டை தோகைமலை சாலையில் அரியாவூர் ஒத்தக்கடை பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ளது.

இங்கு ஒரு டாஸ்மாக மது பான கடை உள்ளது இந்த கடையில் குடிமகன்கள் மது குடித்து விட்டு தகராறு செய்கிறார்கள். மேலும் அங்குள்ள குடிநீர் குழாய் அருகே அமர்ந்து தண்ணீரை கலந்து குடிப்பதால் பெண்கள் தண்ணீர் பிடிக்க வரமுடியாத நிலை உள்ளது. எனவே இந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றும்படி கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டு இருந்தது.

Tags

Next Story
தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரம்..!