திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம்
X

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் இன்று இரண்டு இடங்களில் நடத்தப்பட்டது.

திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் இன்று 28- 2-2024-ம் தேதி கோட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காளியம்மன் கோவில் தெருவில் உள்ள அன்னதானசத்திரம் மற்றும் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நகர் மாங்கல்ய மஹாலில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு திருச்சி மாநகர காவல் துறை சார்பில் சமூக நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரிகள் காவல் உதவி ஆணையர் ஸ்ரீரங்கம் சரகம் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நமது அரசியல் அமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது எனவும் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு யார் மீதும் தெரிந்தோ தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்று எந்த வகையிலும் கடைப்பிடிக்க கூடாது அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கு இணங்க சமய வேறுபாடு சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் இருப்பது பொதுமக்களாகிய நமது கடமையாகும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் சமூகம் (எஸ்சி எஸ்டி) முன்னேறுவதற்காக அரசால் பல்வேறு நலத்திட்டங்களின் மூலம் என்னென்ன உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பன குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது .இந்த இரண்டு இடங்களில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு கூட்டத்திலும் பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த தகவலை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அடுத்த புது மொபைல் வந்துருச்சு இத பாருங்க !!ரியல்மி 14X மொபைல் வரப்போகுது!