திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
X

துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற ஒரு மாணவிக்கு போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கினார்.

திருச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகர போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மாநகர ரைபிள் கிளப் செயல்பட்டு வருகிறது. மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் நிர்வாகத்தின் கீழ் இந்த கிளப் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ரைபிள் கிளப்பில் பள்ளி மாணவ மாணவிகள் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவதற்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் 1ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வந்தது.

இந்த பயிற்சி மைதானத்தில் 50 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 10 மீட்டர் தூரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள்ளது. இந்த பயிற்சி தளத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர் யோகேஸ்வரன், மாணவிகள் சுபர்ணா, கணபத்தர்ஷனா ஆகியோருக்கு இன்று மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பரிசுகள் வழங்கினார். அப்போது ரைபிள் கிளப் செயலாளர் செந்தூர் செல்வன் உடன் இருந்தார்.

இந்த பயிற்சி மையத்தில் இரண்டாவது பேட்ச் பயிற்சி வகுப்புகள் 16ஆம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது துப்பாக்கி சுடும் திறனை வளர்த்துக் கொள்வதற்காக இதில் சேர்ந்து பயனடையலாம் குறைந்த இடங்களே இருப்பதால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக 9843370804 என்ற செல்போன் எண்ணிலும் பதிவு மற்றும் பயிற்சி பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings