/* */

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்டதால் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

HIGHLIGHTS

திருச்சியில் வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X

திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 8-ந் தேதி, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மறித்து கிருஷ்ணகுமார் (வயது 22) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துச் சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான கிருஷ்ணகுமார் மீது திருச்சி பாலக்கரை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 8-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனுக்கு பரிந்துரை செய்தார்.

அதன்பேரில், கிருஷ்ணகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிருஷ்ணகுமாரிடம் வழங்கப்பட்டது.

Updated On: 3 Dec 2021 11:17 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்