திருச்சி பஸ் நிலையத்தில் செல்போன் பறிக்க முயன்ற 2 பேர் கைது

திருச்சி பஸ் நிலையத்தில் செல்போன் பறிக்க முயன்ற 2 பேர் கைது
X
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் செல்போன் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சி கோட்டை பகுதியில் உள்ள காவேரி ரோடு மூவேந்தர் நகரை சேர்ந்தவர் டிபன் கடை ராஜேந்திரன் என்கிற ராஜேந்திரன் (வயது 57). இவர் சத்திரம் பஸ் நிலையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று பகல் 12 மணியளவில் அவரது கடைக்கு சென்றபோது சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை அருகே 3 பேர் சேர்ந்து ராஜேந்திரனின் சட்டைப்பையில் இருந்த செல்போனை எடுக்க முயன்றனர்.

உடனே சுதாரித்துக் கொண்ட ராஜேந்திரன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் இரண்டு பேரையும் மடக்கிப்பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார்.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருச்சி சௌராஷ்டிரா தெருவைச் சேர்ந்த மனோகரன் மகன் வசந்தகுமார் (வயது 30), ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த நாராயணன் மகன் தொண்டி ராசு (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!