படமெடுத்து ஆடும் பாம்புகள்- திருச்சி ஜே.கே.நகரில் பீதியில் மக்கள்
X
By - R.Ponsamy,Sub-Editor |29 April 2022 9:23 PM IST
படமெடுத்து ஆடும் பாம்புகளால் திருச்சி ஜே.கே.நகர் மக்கள் பீதியில் உள்ளனர்.
திருச்சி மாநகராட்சி 61 வது வார்டில் உள்ளது ஜே. கே. நகர். வளர்ந்துவரும் பகுதியான இங்கு ஒரு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் கீழ்ப் பகுதியில் புல் புதர் மண்டி கிடப்பதால் ஏராளமான பாம்புகள் நடமாடுகின்றன .சில நேரங்களில் அந்த பாம்புகள் படமெடுத்து ஆடுவது மக்களை பீதியில் ஆழ்த்துகிறது.
இந்த தண்ணீர் தொட்டியின் அருகில் மண்டல வன பாதுகாவலர் அலுவலகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் மேலும் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளன. அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் பாம்பு தொல்லையால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதனால் பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu