திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.40 லட்சம்  கடத்தல் தங்கம் பறிமுதல்
X

திருச்சி விமான நிலையம் (கோப்பு படம்)

திருச்சி விமான நிலையத்தில் ரூ.9.40 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒரு பயணியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவரிடம் தீவிர சோதனை நடத்தினர். இதில் அவர் ஆசனவாயில் மறைத்து எடுத்து வந்த ரூ. 9.40 லட்சம் மதிப்புள்ள 193 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் மதுரை பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!