காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் திறன் வளர் நிகழ்ச்சி

காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் திறன் வளர் நிகழ்ச்சி
X

திறன் வளர் நிகழ்ச்சியில் பரிசு பெற்ற மாணவி.

"மொழியோடு விளையாடு" என்ற திறன் வளர் நிகழ்ச்சி காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடத்தப்பட்டது.

"மொழியோடு விளையாடு" என்ற திறன் வளர் நிகழ்ச்சி காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று நடத்தப்பட்டது. பள்ளி மாணவர்களிடையே பன்முகத் திறன்களை வளர்க்கும் விதமாக பல போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் கதை சொல்லுதல், விடுகதை, வார்த்தை விளையாட்டு, ஓடித் தேடு, உன்னால் முடியும், சொல்லுங்கள் வெல்லுங்கள், விடுபட்ட எண்களைக் கண்டறிதல், 21/21, சொல்லும் பொருளும் என்பன போன்ற பல புத்தம் புதிய திறன் வளர் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் மாணவர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். ஆசிரியர்கள் சித்ரா, தண்டபாணி, தேவசுந்தரி, நிர்மலா, சத்யா தினேஷ் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக செயல்பட்டனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியின் தலைமையாசிரியர் கீதா பரிசுகள் வழங்கினார். இதில் மாணவர்களின் பன்முகத் திறன்களை வளர்க்கும் விதமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்வை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பெரிதும் பாராட்டினர்.

Tags

Next Story