சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு மேலும் ஒரு விமான சேவை துவக்கம்

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு மேலும் ஒரு விமான சேவை துவக்கம்
X
கோப்பு படம் 
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு மேலும் ஒரு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ மற்றும் ஸ்கூட் விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா தொற்று பரவல் காரணாக பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் தற்போது, படிப்படியாக விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், சிங்கப்பூரில் இருந்து மீண்டும் திருச்சிக்கு ஸ்கூட் விமானம் தனது முதல்சேவையை, மீண்டும் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு, 141 பயணிகளுடன் திருச்சிக்கு வந்த இந்த விமானம், மீண்டும் 65 பயணிகளுடன் நேற்றிரவு இரவு 11.55 மணிக்கு சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது.

Tags

Next Story
ai based agriculture in india