திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம்

திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம்
X

திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

திருச்சியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் தமிழ்நாடு மாநில குழு சார்பில், "வெளியேற்றுவோம் பா.ஜ.க வை" என்கிற முழக்கத்தோடு, ஒரு கோடி மக்கள் சந்திப்பு இயக்கம் கடந்த 25.02.2024 தொடங்கி 05.03.2024 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

ஏஐஒய்எப் திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் இன்றைய 8 ம் நாள் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் இன்று 03.03.2024 மாலை 06.00 மணியளவில் ஏஐஒய்எப் மேற்கு பகுதி தலைவர் பாட்சா தலைமையில், மேற்கு பகுதிக்குட்பட்ட ஆட்டுமந்தை, பட்டாபிராமன் சாலை, தென்னூர் ஹைரோடு, ஜெனரல் பஜார், மூலக்கொல்லத்தெரு, ரிஜமண்ட் பஜார், மீன்கார தெரு, மல்லிகை புரம், பாபு செட்டிதெரு ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று நடைபெற்றது.

இதில் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநில செயலாளர் பா.தினேஷ், மாநில தலைவர் க.இப்ராஹிம், ஏஐஒய்எப் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் விஸ்வநாத், மைய குழு உறுப்பினர் இரா. சுரேஷ் முத்துசாமி, மேற்கு பகுதி செயலாளர் தர்மராஜன், மற்றும் மணிகண்ட ராஜு,.பாலகுமாரன்,ராஜ்குமார்,குலாம் தஸ்தகீர்,G.கணேஷ், மற்றும் முருகன், ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future