திருச்சி கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

திருச்சி கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகளை  அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
X
திருச்சி கடைவீதி பகுதி.
திருச்சி மலைக்கோட்டை பகுதி கடைவீதிகளில் ரோட்டை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

திருச்சி என்.எஸ்.பி. ரோட்டில் அமைந்துள்ள பர்மா பஜார் பெட்டிக்கடைகள் மாநகராட்சியால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 8 அடி முதல் 12 அடி வரை ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். அதே போல மலைவாசல் எதிரில், சின்னகடைவீதி, பெரியகடை வீதி சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளுக்கு முன்பு சுமார் 3 அடி முதல் 8 அடி வரை ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதிகளில் சைக்கிள், தள்ளுவண்டி பழக்கடைகள், ஆட்டோக்கள் நடுரோட்டில் நின்று கொள்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கோட்டை நுழைவு வாயில் பகுதியில் உள்ள கடைகள் அவர்களுக்கு உண்டான இடத்தையும் தாண்டி ரோட்டில் மக்கள் செல்ல முடியாதவாறு கடைகளை ரோட்டை ஆக்கிரமித்து போட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிபடுகின்றனர். அந்த பகுதியில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுகிறது.

இதனால் என்.எஸ்.பி ரோட்டில் எந்த நேரத்திலும் போக்குவரத்து நெரிசல் ஆகவும், பொதுமக்கள் நடந்து செல்ல இயலாமல் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இந்த கொரோனா நோய் தொற்று பரவும் நேரத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் சமூக இடைவெளி இன்றி மக்கள் நடமாட வேண்டியுள்ளது. இதனால் நோய் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது. இதற்கு நல்ல தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்தை சரி செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!