துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு
X

துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உள்ளார்.

துப்பாக்கி சுடும் போட்டியில் வென்ற திருச்சி போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் நடைபெறக் கூடிய மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி சென்னை , ஒட்டிவாக்கத்தில் கடந்த 04.01.22 முதல் 06.01.22 வரை நடைபெற்றது . இப்போட்டியில் பல்வேறு மண்டலத்தை சேர்ந்த காவல் Pistol , Carbine போலீசார் மற்றும் அதிகாரிகள் சுமார் 300 நபர்கள் மற்றும் போட்டியில் கலந்து கொண்டனர் .

இதில் திருச்சி மத்திய மண்டலம் அணி சார்பில் திருச்சி மாநகர காவல்துறையை சேர்ந்த காவல் உதவி கமிஷனர் அஜய்தங்கம் உட்பட10 போலீசார் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர் . 3 தங்கம் பதக்கம் , 2 வெள்ளி , 4 வெண்கலம் திருச்சி மண்டல அணி மொத்தம் 11 பதக்கங்கள் வென்றனர் .

மேலும் இப்போட்டியில் Revoviver – 40 Yards சுடும்போட்டியில் கலந்து கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழக்க பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திருஞானசம்பந்தம் ஒரு தங்கப்பதக்கமும் , எடமலைபட்டிபுதூர் காவல்நிலையம் முதல்நிலை காவலர் பரமசிவம் Snap Shot – 300 Yards சுடும்போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றனர் .

இப்போட்டியில் திருச்சி மாநகர காவல் சார்பாக கலந்து கொண்டு பதக்கங்கள் வென்ற திருச்சி போலீசாருக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!