சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞர்  போக்சோவில் கைது
X

பைல் படம்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் போக்சோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அண்ணா தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விஜி (எ) மெல்வின் அர்னால்டு (வயது 26). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று போதையில் இருந்த மெல்வின் அர்னால்டு திடீரென ஒரு வீட்டுக்குள் புகுந்து தனியாக இருந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சிறுமி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த மெல்வின் அர்னால்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மெல்வின் அர்னால்டு அடிக்கடி போதையில் இதுபோன்று நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மெல்வின் அர்னால்டை நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!