திருச்சி உறையூரில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் பாதாள சாக்கடை

திருச்சி உறையூரில் உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் பாதாள சாக்கடை
X

பாதாள சாக்கடை குழாய் (பைல் படம்)

திருச்சி உறையூரில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் பாதாள சாக்கடையை சரி செய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி உறையூர் வாத்துக்கார தெருவின் நடுப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு விட்டால் அதனை சரிசெய்யும் வகையில், இரும்பு தகடினை கொண்டு மூடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூடி அதிக பாரத்தை தாங்க முடியாமல் சற்று உள்வாங்கிய நிலையில் உள்ளதால் அதன் 4 முனைகளும் சற்று உயர்ந்து காணப்படுகிறது.

இதனால் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைய அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கனரக வானங்கள் செல்லும்போது இந்த மூடி உடைந்து பாதாள சாக்கடையில் விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!