தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 7 பேர் கைது
X

மாதிரி படம் 

திருச்சியில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி உறையூர் டாக்கர் ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக உறையூர் போலீசாருக்கு ரகசியதகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த நவாப் தோட்டத்தை சேர்ந்த ராமலிங்கம் (வயது 55) என்பவரை கைது செய்தனர்.

அதே போல வெக்காளியம்மன் கோயில் அருகில் லாட்டரி வியாபாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சுந்தர் (வயது 58), தேவாங்க காலனியை சேர்ந்த மனோகரன் (வயது 55), பாத்திமா நகர் ராதாகிருஷ்ணன் (வயது 48), வைக்கோல்காரத்தெரு ஜெய் கணேஷ் (வயது 35) ஆகியோர் மீது உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதே போல ஸ்ரீரங்கம் பகுதியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட அம்மா மண்டபம் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 45) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசாரும், கோட்டை பகுதியில் லாட்டரி சீட்டு விற்றதாக பாலக்கரை தர்மநாதபுரத்தை சேர்ந்த சரவணகுமார் (வயது 28) என்பவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story