மக்கள் நீதிமன்ற வழக்குகளில் ஒரே நாளில் ரூ.21.55 கோடிக்கு சமரச தீர்வு

மக்கள் நீதிமன்ற வழக்குகளில் ஒரே நாளில் ரூ.21.55 கோடிக்கு சமரச தீர்வு
X
திருச்சியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற வழக்குகளில் ஒரே நாளில் ரூ.21.55 கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

திருச்சியில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றங்களில் ஒரே நாளில் ரூ. 21. 55 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

திருச்சி மாவட்டத்தின் அனைத்து கோர்ட்களிலும் நேற்று மெகா லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட கோர்ட்டில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாபு தேசிய மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார்.

திருச்சியில் 13 அமர்வுகளும், முசிறியில் 2 அவர்களும், மணப்பாறை, துறையூர், லால்குடி, ஸ்ரீரங்கம் மற்றும் தொட்டியம் கோர்ட்டுகளில் தலா ஒரு அமர்வு என மொத்தம் 20 அமர்வுகள் நடந்தன. பணியில் உள்ள நீதிபதி தலைவராக இருந்து வழக்குகளை சமரசமாக தீர்வு கண்டார். குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி கடன், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, தொழிலாளர் இழப்பீட்டு உரிமைகள், வங்கி மற்றும் நிதி நிறுவனம் ஆகியவை தொடர்பான வழக்குகள் என மொத்தம் 12 ஆயிரத்து 473 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இவற்றில் 2720 வழக்குகளில் சமரசத் தீர்வு ஏற்பட்டது. இதில் 21 கோடியே 55 லட்சத்து 89 ஆயிரம் தீர்வு தொகையாக உரியவர்களுக்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story