திருச்சி ஜோசப் கல்லூரியில் உலகளாவிய சூழலியல் நெருக்கடி பற்றிய கருத்தரங்கு
திருச்சி ஜோசப் கல்லூரியில் சுற்றுச்சூழல் பற்றிய இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
திருச்சி புனித வளனார் கல்லூரியில் "உலகளாவிய சூழலியல் நெருக்கடி, கோவிட் தொற்றுநோய் சிக்கல்கள் மற்றும் உள்ளடக்கிய நிலையான வளர்ச்சிக்கான அறிவு மேலாண்மை அணுகுமுறைகள் மூலம் மறுவாழ்வு நடவடிக்கைகள்" என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் நிதியுதவியுடன் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பத்ம ஸ்ரீ சாய் தாமோதரன் துவக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் டாக்டர்.எம்.ஆரோக்கியசாமி சேவியர் தலைமையுரையாற்றி வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக வணிகவியல் துறைத்தலைவர் டாக்டர் அலெக்சாண்டர், பிரவின் துரை இத்தேசிய கருத்தரங்கின் கருப்பொருள் பற்றி விளக்கினார், மேலாண்மை புலத்தலைவர் டாக்டர் ஜான் வாழ்த்துரை வழங்கினார்.
இந்த தேசிய கருத்தரங்கில் சுற்றுச்சூழல் நெருக்கடி கோவிட் தொற்றுநோய் சிக்கல்கள், மறுவாழ்வு நடவடிக்கைகள் மற்றும் அறிவு மேலாண்மை, நிலையான வளர்ச்சி மற்றும் 'ஆசாதிகா அம்ரித் மஹோத்சவ்' (நாட்டை ஒன்றிணைக்கும் யோசனைகள் மற்றும் இலட்சியங்கள்) ஆகிய ஐந்து துணை கருப்பொருள்கள் அடையாளம் காணப்பட்டன.
சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இந்தியாவின் அனைத்து மாநிலத்திருந்து சுமார் 230-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் பங்கேற்றார்கள். 130-பேர் நேரடியாகவும், 100 -க்கும் மேற்பட்டோர் இணையவழியிலும் பங்கேற்றார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu