திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில்  கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கள்ள சந்தையில் மது விற்ற இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீசார் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எடமலைப்பட்டி புதூரில் உள்ள முருகன் கோவில் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மது பாட்டில்களை அதிக விலைக்கு கள்ள சந்தையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை கண்ட போலீசார் மது பாட்டில்களை விற்பனை செய்தவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர்.

பின்னர் விசாரணை செய்ததில் அவர்கள் நேதாஜி நகரை சேர்ந்த செந்தில் முருகன் (வயது 38), கிருஷ்ணா புரத்தை சேர்ந்த பாலை என்கிற இளமாறன் (வயது 54) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களிடம் இருந்து 94 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!