திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற ஒருவர் கைது

திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற ஒருவர் கைது
X
கோட்டை பகுதியில் கஞ்சா விற்ற ஒருவர் கைது

திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் இன்று மதுரை ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மதுரை ரோடு ஜீவா நகர் சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர் மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்த ரவி (என்கிற) புளியங்கொட்டை ரவி (வயது 42) என்பதும் அவர் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து புளியங்கொட்டை ரவி மீது வழக்கு பதிவு செய்து அவரிடமிருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஒன்றரை கிலோ கஞ்சா, பணம் ரூ. 200, ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!