திருச்சி நகரில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

திருச்சி நகரில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
X
திருச்சி நகரில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் காமராஜ் நகர் ஆற்றுப்பாலம் கழிவறை அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமாறனுக்கு நேற்று ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சப்-இன்ஸ்பெக்டர் சோனியாகாந்தி தலைமையிலான போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு தாராநல்லூர் சூரஞ்சேரி காமராஜ்நகரை சேர்ந்த கணேசன் மனைவி தமிழ்செல்வி (வயது 52) என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்கள் தனி கிளை சிறையில் அடைத்தனர்.

இதே போல் எ.புதூர் போலீசார் நேற்று முன்தினம் ராம்ஜிநகர் மில்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மில் காலனியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த பாபி (57), மாரியம்மன் கோயில் அருகே கஞ்சா விற்ற பாரத் (எ) ராஜ்கிரண்(23) ஆகியோரிடமிருந்து தலா 150 கிராம் கஞ்சாவையும், திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த மில் காலனியை சேர்ந்த லட்சுமணன்(42) என்பவரிடம் 175 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!