திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்த கடைக்கு சீல்

திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்த கடைக்கு சீல்
X

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு  உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

திருச்சியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்சி உணவு பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் அந்த கடைக்கு சென்று எச்சரிக்கை செய்ததோடு, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பெட்டிக்கடையில் தொடர்ந்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வரவே இன்று அந்த கடைக்கு தடையாணை பிறப்பிக்கப்பட்டு கடையை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!