திருச்சி மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி

திருச்சி மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைபள்ளியில் மக்கள் சக்தி இயக்கம் சார்பில் மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கப்பட்டது.
இன்றைய நாகரீக மற்றும் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் மக்களின் வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார ரீதியில் உயர்வாக இருந்தாலும் அவர்களிடம் தன்னம்பிக்கை குறைந்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. இதன் காரணமாக எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் மாணவ பருவத்திலேயே அவர்களுக்கு தன்னம்பிக்கை தொடர்பான பயிற்சி அளிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகிறது.
அந்த வகையில் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் மேம்பாடு சார்ந்த தன்னம்பிக்கை வளர்த்தல் சார்ந்த தன்னை அறிதல் , இலக்குகளை நிர்ணயம் செய்தல். நினைவாற்றல் மற்றும் தகவல் தொடர்பை மேம்படுத்துதல் , தலைமைப் பண்பு மற்றும் அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்வதில் உள்ள அச்சத்தை போக்கிடும் வகையிலான பயிற்சியை மக்கள் சக்தி இயக்க மாநில துணை செயலாளர் ஆர்.இளங்கோ நடத்தினார்.
மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் இதில் கலந்து கொண்டு பேசுகையில் ஆசிரியர்கள் தனக்கான கடமையினை முழுவதுமாக உணர்ந்து செயலாற்றவும், மாணவர்கள் தன்னை முழுவதுமாக புரிந்து கொண்டு வாழ்வியல் சிக்கல்களை எதிர்கொண்டு இலக்கு நோக்கிய பயணத்தில் வெற்றி பெற்று மனமகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பயிற்சியை மக்கள் சக்தி இயக்க சார்பில் மாவட்டம் முழுவதும் இலவசமாக நடத்தி வருகிறது என்றார்.
தன்னம்பிக்கை பயிற்சியில் பள்ளி உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டார்கள். முடிவில் பள்ளி ஆசிரியை அருணா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu