திருச்சியில் ஒன்பதரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 மாவு மில்லுக்கு சீல்
பைல் படம்.
திருச்சி, மேற்கு மற்றும் கிழக்கு வட்டம் ஆகிய பகுதிகளில் பொது வினியோகத் திட்ட ரேஷன் அரிசியை கள்ளத்தனமாக கடத்தி மாவாக அரைத்து விற்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் சோதனை மேற்கொள்ளத் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார்.
அதன்பேரில் திருச்சி கிழக்கு, மேற்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாவு அரைக்கும் ஆலைகளை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் தலைமையில் திருச்சி கிழக்கு, மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் வட்ட தனி தாசில்தார்கள் அடங்கிய குழு, பறக்கும் படை துணை தாசில்தார் மற்றும் திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் அடங்கிய சிறப்புக் குழு அமைத்து நேற்று சோதனையிட்டனர்.
அப்போது திருச்சி கிழக்கு வட்டம் அரியமங்கலம் பகுதியில் உள்ள அன்வர் பிளவர் மில்லில் ரேஷன் அரிசி கலந்த 7,650 கிலோ குருணை அரிசி மற்றும் குருணையாக அரைக்க தயாராக இருந்த 120 கிலோ ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டது.
மேலும் திருச்சி மேற்கு வட்டம் உறையூர் பகுதியில் அனுமதியின்றி சிவனேசன் என்பவருக்கு சொந்தமான மில்லில் 1,500 கிலோ உடைத்த ரேஷன் அரிசி மற்றும் 210 கிலோ ரேஷன் அரிசி என மொத்தம் 9,480 கிலோ அரிசி கைப்பற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து மேற்கண்ட 2 மாவு அரைக்கும் மில்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu