திருச்சியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட 640 கிலோ வாழைக்காய் பறிமுதல்

திருச்சியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட 640 கிலோ வாழைக்காய் பறிமுதல்
X

திருச்சி வாழைக்காய் மண்டியில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி டாக்டர் ரமேஷ் பாபு சோதனை நடத்தினார்.

திருச்சி வாழைக்காய் மண்டியில் ரசாயனம் தெளிக்கப்பட்ட 640 கிலோ வாழைக்காய்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி காந்திமார்க்கெட்டில் உள்ள வாழைக்காய் மண்டியில் இன்று திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ் பாபு தலைமையில் புகாரின் பேரில் சில கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஸ்டாலின், பாண்டியன், வசந்தன், இப்ராகீம், வடிவேல் ஆகியோர் நடத்திய இந்த சோதனையின்போது ரசாயனம் தெளிக்கப்பட்ட 640 கிலோ வாழைக்காய்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரசாயன மருந்துகள் அவற்றை தெளிப்பதற்காக வைத்திருந்த ஸ்பிரேயர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

வாழைக்காய் வியாபாரிகள் இயற்கையான முறையில் வாழைத்தார் பழுக்க வைக்கவேண்டும், மீறி ரசாயன கலவை தெளித்தால் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனம் கலந்த வாழைக்காய்கள் அரியமங்கல் குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!