துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்
X

பைல் படம். 

துபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 350 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை, விமான நிலையத்தில் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், கேரளாவைச் சேர்ந்த அப்துல்ரபீக், முகமது கோட்டி, வெள்ளப்பா ஆகிய 3 பேரும் சேர்ந்து மொத்தம் 350 கிராம் தங்கத்தை பேப்பர்களாக தங்களது உடமைகளுக்குள் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.12.50 லட்சமாகும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!