திருச்சி விமான நிலையத்தில் இரும்புராடில் மறைத்து கடத்திய தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இரும்புராடில் மறைத்து கடத்திய தங்கம் பறிமுதல்
X

இரும்பு ராடில் கடத்தி வரப்பட்ட தங்கம்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு இரும்புராடில் மறைத்து கடத்திய ரூ.4.59 லட்சம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகளும், உடமைகளை வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகளும் சோதனை செய்தனர்.

அப்போது பயணி ஒருவர் கொண்டு வந்த உடமையில் இரும்பு ராடுக்குள் 94.500 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ. 4.59 லட்சம் ஆகும். இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!