திருச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற டீ கடைக்கு சீல்
திருச்சியில் குட்கா விற்ற டீ கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
திருச்சி ஸ்ரீரங்கம், காந்தி ரோடு பகுதியில் இயங்கிவந்த ஸ்ரீ நாகநாதர் டீ ஸ்டால் கடையில் தொடர்ந்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் கடந்த 26.03.2021 அன்று முதல் ஆய்வில் அவரது கடையில் தமிழக அரசால்தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது அறிந்து ரூ.5000/- அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்கள் தொடர்ந்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டு மீண்டும் 11.02.2022 அன்று ஆய்வில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரூ.10,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், அன்றைய தினமான 11.02.2022 அன்று அவசர தடையாணை அறிவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை, உணவு பாதுகாப்பு ஆணையர் செந்தில்குமார் இன்று 23.02.2022-ல் அவசர தடையாணை உத்தரவு வழங்கியதன் அடிப்படையில் அந்த டீ கடைக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்ரமேஷ்பாபு கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006-ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த கடை சீல் செய்யப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின், பாண்டி, மகாதேவன், அன்புச்செல்வன், வசந்தன் மற்றும் ஜஸ்டின் ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu