/* */

திருச்சியில் அப்துல் கலாம் உருவ படத்திற்கு பள்ளி மாணவ மாணவிகள் மலரஞ்சலி

திருச்சியில் அப்துல் கலாம் உருவ படத்திற்கு பள்ளி மாணவ மாணவிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

HIGHLIGHTS

திருச்சியில் அப்துல் கலாம் உருவ படத்திற்கு பள்ளி மாணவ மாணவிகள் மலரஞ்சலி
X

திருச்சியில் பள்ளி மாணவர்கள் முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மாற்றம் அமைப்பின் சார்பில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவரும், சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் 7ம் ஆண்டு நினைவு தினம் டி. வி. எஸ் டோல்கேட் செங்குளம் காலனி பகுதியில் உள்ள திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது.

சிறந்த ஆற்றல் மிக்க விஞ்ஞானியான டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல்கலாம் தான் வாழ்ந்த காலத்தில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். நமது இந்திய நாட்டின் மீது பற்று இந்திய நாட்டின் வளர்ச்சி மற்றும் நலன் மீது மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டார். மேலும் இன்றைய இளைய தலைமுறையினரிடம் தான் நமது இந்திய நாட்டின் எதிர்காலம் உள்ளது என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். மேலும் தான் வாழ்ந்த காலத்தில் உயர்ந்த பதவிகள் வகித்த போது மிகவும் எளிமையானவராக பலருக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர். தன்னுடைய உழைப்பு மற்றும் திறமையால் சிகரத்தை அடைந்து பல சாதனைகளை புரிந்தவர். அவருடைய 7ம் ஆண்டு நினைவு நாளில் மாற்றம் அமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பில் நினைவஞ்சலி மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பழ வகையிலான மர கன்றுகள் வழங்கும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.சரஸ்வதி தலைமை தாங்கினார். அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் கெளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான எஸ். அண்ணாதுரை முன்னிலை வகித்தார். நிகழ்வில் பள்ளியில் 5 ம் வகுப்பு பயிலும் ,தாரணி, அமிர்தவர்ஷினி, தன்ஷிகா, முகமது சாஜித் 4 ம் வகுப்பு பயிலும் அட்சயா உள்ளிட்ட மாணவ மாணவிகள் மறைந்த டாக்டர் ஏ. பி. ஜே அப்துல் கலாமினட வாழ்க்கை வரலாறு ,அவர் வகித்த பதவிகள் குறித்தும் அவருடைய சிறப்புகள் குறித்தும் பேசினர். சிறப்பாக பேசிய மாணவ மாணவிகளுக்கு அமைப்பின் சார்பில் பரிசுகளை அமைப்பின் கெளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் எஸ் அண்ணாதுரை வழங்கினார்.


மேலும் இந்நிகழ்வில் அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா, இணை செயலாளர் அல்லிக் கொடி ஆகியோர் பழ வகையிலான கொய்யா, மாதுளை உள்ளிட்ட மரகன்றுகளை வழங்கினர். மேலும் இந்நிகழ்வில் அனுஷ்மா நந்தினி மற்றும் இல்லம் தேடி கல்வி ஆசிரியர்கள் ஆர். புவனேஸ்வரி ஜி.ரஷிதா கே. திவ்யா பள்ளியின் உதவியாளர் கல்யாணி அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைபாபாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் உள்பட திரளான மாணவ மாணவிகள் பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி மற்றும் புகழ் அஞ்சலி செலுத்தினர். நிகழ்வின் முடிவில் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் கே. மகாலட்சுமி நன்றி கூறினார்.

Updated On: 27 July 2022 4:40 PM GMT

Related News

Latest News

 1. கோவை மாநகர்
  கோவையில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து லாரி சேதம்
 2. லைஃப்ஸ்டைல்
  தமிழில் பிறந்த நாள் வாழ்த்து கூறும் மேற்கோள்கள்
 3. லைஃப்ஸ்டைல்
  தமிழில் போகிப் பண்டிகை வாழ்த்துக்கள் சொல்லும் அழகியல்
 4. லைஃப்ஸ்டைல்
  வயசு மேல வயசு வந்து வாழ்த்துகிற நேரமிது..!
 5. லைஃப்ஸ்டைல்
  கவிதை அலங்காரத்தில் அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 6. ஈரோடு
  டி.என்.பாளையம் வனச்சரகத்தில் நாளை யானைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
 7. குமாரபாளையம்
  சாலை விபத்தில் இளைஞர் பலி : உடல் உறுப்புக்கள் தானம்..!
 8. வீடியோ
  Opening - Mass Entry செம்ம Vibe-ஆ இருக்கு !#saamaniyan...
 9. ஈரோடு
  சத்தியமங்கலம்: கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 1,300 கிலோ ரேஷன் அரிசி...
 10. வீடியோ
  Ramarajan,Ilaiyaraaja Combination -னே Blockbuster தான் !#ramarajan...