திருச்சியில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவக்கம்

திருச்சியில் பள்ளி  சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி துவக்கம்
X

திருச்சியில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

திருச்சியில் பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை இன்று அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணியினை இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கு தடுப்பூசி போடும் நிகழ்வினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (3.1.2022) நேரில் பார்வையிட்டு தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து இருபத்தாராயிரத்து நானூறு சிறார்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் சு.சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, நகர் நல அலுவலர் டாக்டர் யாழினி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சுப்பிரமணியன், முன்னாள் துணை மேயர் அன்பழகன், மாவட்டப் பிரமுகர் வைரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!