திருச்சி உடையான் பட்டியில் மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள்

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை கடைபிடிக்கும் விதமாக, மாநகராட்சி 5 மண்டலங்களிலும் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உத்தரவிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டலங்களிலும் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று கே.கே. நகர் உடையான்பட்டி ரயில்வே கேட் அருகில் உள்ள ரிவேரா தெரு மற்றும் வாய்க்கால் கரை பகுதிகளில் திருச்சி மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் இணைந்து புங்கன் மரம், வாகை மரம், நாவல்மரம், வேம்பு, பூவரசு, வாதா மரம் உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் இன்று நடப்பட்டது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர் .
விழாவில் திருச்சி மாநகராட்சி நான்காம் மண்டலத் தலைவர் துர்கா தேவி, செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் சண்முகம், உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் மலர்விழி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.மேலும் இது போன்ற மரம் நடும் நிகழ்வுகள் ஒவ்வொரு பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் இதுபோன்று நடுவதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. புதிதாக பல இடங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு அதிகாரகிள் இடம் தேர்வு செய்து உள்ளனர். இதற்காக வனத்துறையில் இருந்து மரக்கன்றுகள் ஏராளமாக வரவழைக்கப்பட இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu