திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் சதுரங்க போட்டி

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் சதுரங்க போட்டி

திருச்சியில்  சதுரங்க போட்டி நடந்தது.

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மற்றும் 4 நைட்ஸ் செஸ் அகாடமி சார்பில் செஸ் போட்டி நடந்தது.

திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மற்றும் 4 நைட்ஸ் செஸ் அகாடமி இணைந்து நடத்தும் Open, Under 10, Under 12 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாநில அளவில் நடைபெறும் சதுரங்க போட்டிக்கு திருச்சி மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வோருக்கான தகுதி சுற்று போட்டி சந்தான வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் Open, Under 10, Under 12 பிரிவில் 70 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் வெற்றி பெறும் தலா 2 வீரர், வீராங்கனைகள் பிப்ரவரி 24 முதல் 27-ஆம் தேதி முடிய திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

12 வயதிற்குட்பட்ட பிரிவில் பிப்ரவரி 14 முதல் 17-ஆம் தேதி முடிய ராஜபாளையத்தில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கின்றனர். போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பள்ளியின் செயலர் முனைவர். கோ, மீனா, பள்ளியின் தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன் மற்றும் இயக்குனர் அபர்ணா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த போட்டிக்கான பரிசளிப்பு விழாவில் சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் முனைவர். எம். பொற்செல்வி, சீனியர் முதல்வர் பத்மா சீனிவாசன் மற்றும் டீன் ஆர். கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

திருச்சி மாவட்ட சதுரங்க கழகம் சார்பாக செயலர் வி.தினகரன் நன்றி கூறினார்.

Tags

Next Story