கூடுதல் குவாரிகள் திறக்க கோரி திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்

கூடுதல் குவாரிகள் திறக்க கோரி திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் போராட்டம்
X

திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகம் முன் மணல் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

கூடுதல் குவாரிகள் திறக்க கோரி திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திருச்சியில் இன்று காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். திருச்சி சுப்பிரமணியபுரத்தில் பொதுப்பணி துறையின் மண்டல தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அதன் மாநில தலைவர் செல்ல ராஜாமணி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். மாநில செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் ராமசாமி உட்பட ஏராளமான மணல் லாரி உரிமையாளர்கள் டிரைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.


50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், லட்சக்கணக்கான லாரி ஓட்டுனர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழக முழுவதும் அதிக எண்ணிக்கையில் புதிய அரசு மணல் குவாரிகளை இயக்க வேண்டும், ஒவ்வொரு மணல் குவாரியிலும் உள்ள விற்பனை கிடங்குகளில் குறைந்தபட்சம் 200 லாரிகளுக்கு லோடு செய்ய அனுமதிக்க வேண்டும், மணல் லாரிகளுக்கு வாகன சோதனையின் போது ஆன்லைன் அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும் என்பது உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் விற்பனையில் சில தளர்வுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக மணல் விற்பனை மிக வேகமாக நடைபெற்றது. இதனால் கட்டுனர்கள், வீடு கட்டுபவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து எம் சாண்டுக்கு பதிலாக மணல் மூலம் வீடுகளை கட்ட ஆரம்பித்தனர்.

ஆனால் கடந்த மாதம் தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ரைடு நடத்தினார்கள். இந்த சோதனையின்போது ஏராளமான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் காரணமாக தற்போது மீண்டும் மணல் விலை அதிகரித்து உள்ளது. இந்த சூழலில் தான் கூடுதல் குவாரிகளை திறக்க அனுமதிக்க வேண்டும் எனக் கூறி மணல் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மூச்சுத் திணறல் அப்படினா என்ன.....? இதனால்  அபாயமா....பயப்பட வேண்டாம்  அதற்கான வழிகளை அறியலாம்..!