திருச்சியில் ரூ.5 கோடி விவசாய நிலம் மோசடி- 8 பேர் மீது போலீஸ் வழக்கு
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு அடையவளஞ்சான் வீதியில் அரியக்குடி சிதம்பரம் செட்டியார் அன்னதான சத்திரம் உள்ளது. சிவகங்கை மாவட்டம் அரியக்குடி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரின் முன்னோர்கள் 1882-ம் ஆண்டு இந்த சத்திரத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த அன்னதான சத்திரத்திற்கு சொந்தமான விவசாய நிலங்கள் திருச்சியில் உள்ளது. இந்த நிலங்களை டிரஸ்ட் உறுப்பினர்களாக உள்ள, அவரது உறவினர்களான நாராயணன், சிதம்பரம், குமரப்பன், ராமசாமி, சொக்கலிங்கம், மற்றொரு குமரப்பன், கிருஷ்ணன் ஆகிய 7 பேரும் மற்றும் கண்ணன் என்பவரும் நிர்வகித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் டிரஸ்ட் உறுப்பினர்கள் அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களை டிரஸ்ட் உறுப்பினர்களாக சேர்த்து, போலி ஆவணங்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, ரூ.5 கோடி மதிப்பிலான விவசாய நிலங்களை கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து வெங்கடாசலம் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu