திருச்சி மாநகராட்சியில் ரூ.92 லட்சம் உபரி பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியில் ரூ.92 லட்சம் உபரி பட்ஜெட் தாக்கல்
X

திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

திருச்சி மாநகராட்சியில் ரூ.92 லட்சம் உபரி பட்ஜெட்டை மேயர் அன்பழகன் தாக்கல் செய்தார்.

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் தொடர்பான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 2022 -23ம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வரி மற்றும் நிதிக்குழு தலைவர் முத்துச்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட் உரையாற்றினார்.

இந்த பட்ஜெட்டில் மொத்த வருவாய் 2140.19கோடி எனவும் மொத்த செலவினம் 2139 . 19கோடி என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் ரூ.92 கோடி உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சிக்கு ரூ.40 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவது, ஸ்ரீரங்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் அமைப்பது என்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றிருந்தது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்