திருச்சி விமான நிலையத்தில் ரூ.811/2 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.811/2 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
X
திருச்சி விமான நிலையத்தில் ரூ.811/2 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, மஸ்கட், ஓமன், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த விமானத்தில் வந்த பெரம்பலூரை சேர்ந்த முகமது யூசுப் என்ற பயணி பேஸ்ட் வடிவில் 983.5 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திய ரூபாயில் அதன் மதிப்பு ரூ.48 லட்சத்து 62 ஆயிரம் ஆகும்.

இதேபோல் கடலூரைச்சேர்ந்த மலைராஜன் என்பவரின் உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைத்து 668.60 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனையும் பறிமுதல் செய்தனர். இதன் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.33 லட்சத்து 6 ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் ரூ.81,1/2 லட்சம் தங்கம் கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
நாமக்கல் துளிர் 2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா!