திருச்சி விமான நிலையத்தில் பெண்ணிடம் ரூ.7.30 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்
பைல் படம்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், சார்ஜா, அபுதாபி, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், இதே போல் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், திருப்பதி போன்ற நகரங்களுக்கும் உள்நாட்டு சேவையாகவும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. முன்னதாக அதில் சென்ற பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் அதிகாரிகளும், உடமைகளை வான் நுண்ணறிவு சுங்க அதிகாரிகளும் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு பெண் பயணியின் பேக்கில் ஏராளமான அமெரிக்க டாலர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் இந்திய மதிப்பு ரூ.7.30 லட்சமாகும். இது தொடர்பாக சுங்க அதிகாரிகள் அந்த பெண் பயணியிடம் நடத்திய விசாரணையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரை சேர்ந்த தாஜுதீன் மனைவி நூர்ஜகான் (வயது 28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணிடமிருந்த வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu