ரூ.4.50 கோடியில் புதிய மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி: அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல்
திருச்சி பிராட்டியூர், ராம்ஜி நகர், கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர் ஆகிய பகுதிகளுக்காக புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. ரூ.4 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்படவிருக்கும் இதற்கான பணியினை இன்று அடிக்கல் நாட்டி நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
விழாவிற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், நகர் புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளது. அதன் தொடக்கமாக தான் 19 நகராட்சி, கும்பகோணம் மாநகராட்சி அரசாணை வெயிடப்பட்டு உள்ளது.
தமிழக தேர்தல் ஆணையத்துடன் பேசி அவர்கள் அறிவிக்கும் தேதியில் தேர்தல் நடக்கும். திமுக ஆட்சியில் தேர்தல் அதிகாரிகள் மிக நேர்மையாக நடந்து கொண்டுள்ளனர். ஒரு வாக்கு, 4 வாக்கு வித்தியாசத்தில் எல்லாம் திமுகவினர் தோல்வியை தழுவி உள்ளனர். நேர்மையாக நடத்தியதால்தான் இது நடைபெற்றுள்ளது.
தோல்விக்கான காரணத்தை தேடி அதிமுகவினர் சொல்லி கொண்டிருக்கிறார்கள். காவிரி பாலம், திருச்சி மாநகரில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாராகி கொண்டிருக்கிறது. ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டுவதற்கான நிர்வாக ஒப்புதல் கிடைத்து விட்டது. அதற்காக 140 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. புதிய மார்க்கெட்டுக்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கும். கோயில் திறக்க முதல்வர் முடிவு செய்துள்ளதை தெரிந்து கொண்டு பிஜேபி போராட்டம் நடத்தியது என்று அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu