திருச்சி விமான நிலையத்தில் ரூ.45 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையம் (கோப்பு படம்)
கொரோனா பரவலைதடுப்பதற்காக உலகம் முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் விமானபோக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டது. இதன் காரணமாக வெளி நாடுகளில் சிக்கிதவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக இந்தியா சார்பில்சிறப்பு மீட்பு விமானங்கள்இயக்கப்பட்டு வருகின்றன.
இதேபோல் திருச்சி விமானநிலையத்தில் இருந்து பல்வேறு வெளி நாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள்இயக்கப்பட்டு வருகின்றன.அதேநேரத்தில் வெளி நாடுகளில் இருந்தும் திருச்சிக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது.இந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதற்கிடையில் திருச்சி விமானநிலைய கழிவறையில் கருப்புநிற கவர் கிடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து கழிவறைக்குள் சென்று சோதனைசெய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த கவரை கைப்பற்றினர். பின்னர் அதனை பிரித்துபார்த்ததில், அதில் 900 கிராம்தங்கம் இருந்தது. இதன்மதிப்பு ரூ.45 லட்சம் ஆகும்.துபாயில் இருந்து விமானத்தில் வந்த யாரோ ஒரு பயணி தங்கத்தை கடத்தி வந்துஇருக்கலாம். அதிகாரிகளின்சோதனைக்கு பயந்து,அதனை கழிவறையில்போட்டு விட்டு சென்று இருக்கலாம் என தெரிகிறது.இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைநடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu