திருச்சி பஞ்சப்பூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க்: கட்டுமான பணிகள் துவக்கம்

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.400 கோடியில்  டைடல் பார்க்: கட்டுமான பணிகள் துவக்கம்
X

திருச்சி ஐடி பார்க்கின் மாதிரி தோற்றம்.

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட இருக்கும் டைடல் பார்க் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்பட இருக்கிறது.

திருச்சி பஞ்சப்பூரில் டைடல் பார்க் அமைக்கப்பட இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் அமைந்து வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்காவினை (டைட்டில் பார்க்) சென்னை நிறுவனம் அமைக்க உள்ளது.

இந்த பூங்காவானது 14.17 இயக்க நிலப்பரப்பில் 6 லட்சம் சதுர அடி கட்டிட பரப்பளவில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் இதனை கட்டுவதற்கான ஒப்பந்த புள்ளிகள் கூறும் பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டைடல் பார்க் வருவதன் மூலம் திருச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பல்வேறு நிறுவனங்கள் இதன் மூலம் திருச்சியில் அடி எடுத்து வைக்க முற்படலாம். இதற்கான பணிகள் அனைத்தும் விரைவில் தொடங்கப்படும்

திருச்சியில் அமைய இருக்கும் டைடல் பார்க் அமைய இருப்பதையொட்டி திருச்சி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி நவல்பட்டு அண்ணா நகரில் ஏற்கனவே தமிழக அரசின் தகவல் தொழில் நுட்ப நிறுவனமான எல்காட் சார்பில் கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பார்க் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் தற்போது கூடுதலாக ஒரு டைடல் பார்க் அதுவும் நகருக்கு உள்ளே அமைய இருப்பது திருச்சி சுற்று வட்டார இளைஞர்களுக்கு அதிக மகிழ்ச்சியை தந்து உள்ளது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil