திருச்சி: வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி- கலெக்டரிடம் புகார்

திருச்சி: வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி- கலெக்டரிடம் புகார்
X
திருச்சியில் வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மேல ஆடுதுறை மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 42). இவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சிவராசுவை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.

அதில், நான் திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் கன்சல்டன்சி நிறுவனம் நடத்தி வருகிறேன். இந்த நிலையில் திருவெறும்பூர் மலைக்கோவில் டி.நகர் பகுதியில் ரயில்வே படிப்பு சம்பந்தமான இன்ஸ்டிடியூட் நடத்திவரும் முருகானந்தம் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் ரயில்வேயில் நிரந்தர வேலை வாங்கி தருவதாக என்னிடம் தெரிவித்தார். இதனை நம்பிய நான் இருபது பேரிடம் இருந்து ரூ.40 லட்சம் பெற்று, அதனை முருகானந்தத்திடம் கொடுத்தேன்.

ஆனால் அந்த தொகையை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வேலை வாங்கித் தரவில்லை. இதில் அவரது மனைவியும் உடந்தையாகி உள்ளார். இப்போது பணத்தை திருப்பி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே இந்த புகாரை ஏற்று தக்க நடவடிக்கை எடுத்து ரூ. 40 லட்சம் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி உள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!