விபத்தில் ஒரு காலை இழந்த ராணுவ வீரருக்கு ரூ.1 கோடியே 64 லட்சம் இழப்பீடு

விபத்தில் ஒரு காலை இழந்த ராணுவ வீரருக்கு ரூ.1 கோடியே 64 லட்சம் இழப்பீடு
X

இராணுவ வீரர் தனசேகரன் பாண்டியன்.

விபத்தில் ஒரு காலை இழந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரருக்கு ரூ.1 கோடியே 64 லட்சம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வேம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன் பாண்டியன் (வயது 37.). இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். விடுமுறையில் மனைவியின் சொந்த ஊரான திருச்சி குண்டூர் ராகவேந்திரா நகருக்கு வந்துவிட்டு ஊருக்கு திரும்பிய போது விபத்தில் சிக்கிக்கொண்டார்.

மனைவியின் இருசக்கர வாகனத்தில் சென்றபோது 12/06/2018ம் தேதி அன்று திருச்சி -புதுக்கோட்டை மெயின் ரோட்டில் சென்றபோது தனசேகரன் பாண்டியன் மீது அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் தனசேகரன் பாண்டியன் தனது வலது காலை இழந்துவிட்டார். ஆகையால் அவர் ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இது தொடர்பாக நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் விபத்தில் வலது காலை இழந்ததற்கு நஷ்ட ஈடு கேட்டு தனசேகர பாண்டியன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த திருச்சி மூன்றாவது கூடுதல் சார்பு நீதிபதி சோமசுந்தரம் பாதிக்கப்பட்ட ராணுவ வீரருக்கு தமிழக அரசு போக்குவரத்து கழகம் ரூ. 1 கோடியே67 லட்சத்து 84,020 வழங்கவேண்டுமென தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர் தரப்பில் தரப்பில் வக்கீல் முத்துமாரி ஆஜராகி வாதாடினார்.

Tags

Next Story
மூச்சுத் திணறல் அப்படினா என்ன.....? இதனால்  அபாயமா....பயப்பட வேண்டாம்  அதற்கான வழிகளை அறியலாம்..!