மின்பொறியாளரிடம் பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மின்பொறியாளரிடம் பணம் பறித்த ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
X
மின்பொறியாளரிடம் பணம் பறித்த திருச்சி ரவுடி மீது போலீஸ் கமிஷனர் உத்தரவின்படி குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், கத்தியை காட்டி பணம் பறிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்காணிக்கவும், வாகன தணிக்கை செய்து குற்றவாளிகளை கண்டறிந்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

கடந்த 03.04.22-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வீரேஸ்வரம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற மின்பொறியாளர் ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, இருசக்கர வாகனம் மற்றும் ரூ.2000 பணத்தை பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கின் சம்பந்தப்பட்ட ரவுடி மகாமுனி (வயது 36) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணையில் அவர் மீது திருச்சி மாவட்ட காவல் நிலையங்களில் கஞ்சா வழக்கு உட்பட 19 வழக்கும், திருச்சி மாநகர காவல் நிலையங்களில் கஞ்சா மற்றும் திருட்டு வழக்கு உட்பட 6 வழக்கும் (மொத்தம் 25 வழக்குகள்) நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

எனவே, சரித்திரபதிவேடு(ரவுடி) மகாமுனி தொடர்ந்து இளைஞர்களை சீரழிக்கும் கஞ்சா போதை பொருளை விற்பனை செய்து வருவதும், பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர் எனவும், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவார் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்கண்ட எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ரவுடி மகாமுனியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும் சிறையில் அ

Tags

Next Story
Weight Loss Tips In Tamil