திருச்சி அருகே வயலூரில் சேவல் கண்காட்சி

திருச்சி அருகே வயலூரில் சேவல் கண்காட்சி
X

கண்காட்சியில் பங்கேற்ற ஒரு சேவல்.

திருச்சி அருகே வயலூரில் நடைபெற்ற சேவல் கண்காட்சியில் ஏராளமான சேவல்கள் கலந்து கொண்டன.

திருச்சி அருகே வயலூரில் சேவல் கண்காட்சி நடைபெற்றது.

திருச்சி மாவட்ட கிளி மூக்கு விசிறி வால் சேவல் நலச்சங்கம் சார்பில் வயலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 3-ம் ஆண்டாக சேவல் கண்காட்சி இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த கண்காட்சி இன்று மாலை வரை நடைபெற்றது.

இக்கண்காட்சியில் பாரம்பரிய வண்ண சேவல்களான கிளி மூக்கு, மயில், காகம், ஊலான், கருங்கிரி, வெள்ளை மற்றும் பூதி போன்ற போன்ற 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய இன சேவல்கள் கண்காட்சியில் கலந்து கொண்டன.இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் சேவல்களுக்கு முதல் பரிசாக ஐந்து சேவலுக்கு நான்கு கிராம் தங்க நாணயமும், இரண்டாம் பரிசாக 10 கிராம் தங்க நாணயம் 10 சேவல்களுக்கும், மூன்றாம் பரிசாக 15 சேவல்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், நான்காம் பரிசாக 20 சேவல்களுக்கு டேபிள் பேன் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் கண்காட்சியில் முதலிடம் பிடிக்கும் சேவலுக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. விழாவிற்கு தஞ்சை விஸ்வநாதன், மேலூர் குணா ஆகியோர் தலைமை தாங்கினார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கை வேலன், ஜெயராஜ், ரகுநாத் மற்றும் திருச்சி மாவட்ட கிளி மூக்கு விசிறிவால் சேவல் நல சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அடுத்த படியாக சேவல் சண்டைகளும் நடத்தப்பட்டு வந்தது. சேவல் போட்டிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டு இருப்பதால் சேவல்போட்டி ஆர்வலர்கள் அதனை கண்காட்சி நடத்தி பரிசுகளை தட்டி செல்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் திருச்சியில் சேவல் கண்காட்சி நடத்தப்பட்டு உள்ளது.

Tags

Next Story
ai solutions for small business