திருச்சியில் இரவு நேர ஊரடங்கை பயன்படுத்தி திருடும் கொள்ளையர்கள்

திருச்சியில் இரவு நேர ஊரடங்கை பயன்படுத்தி திருடும் கொள்ளையர்கள்
X
திருச்சியில் இரவு நேர ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளையர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சியில், ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்படும் முழு நேர ஊரடங்கை மர்ம நபர்கள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பஜார் பகுதியில் பூட்டியிருக்கும் கடைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தங்களுடைய கை வரிசையை காட்டுகிறார்கள் என புகார் எழுந்துள்ளது.

இது குறித்து திருச்சி மாநகர பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், தற்போது இரவு 10 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இல்லாததால் மாநகரில் உள்ள தில்லைநகர், சாஸ்திரி நகர் ரோடு உள்ளிட்ட மாநகரில் பல்ஙேறு இடங்களில் அதிகமான கடைகள் மற்றும் நிறுவனங்கள் அடைக்கப்பட்டு விடுகிறது.

இதனால் இந்த நேரத்தில் இங்கு யாரும் வர மாட்டார்கள் என்பதை அறிந்த கொள்ளையர்கள் பூட்டியிருக்கும் வீடுகள், கடைகள் உள்ளிட்ட இடங்களுக்கு சர்வ சாதாரணமாக சென்று பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுப்பதற்கு திருச்சி மாநகர போலீசார் தொடர்ந்து இரவு நேரங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story